Tuesday, February 21, 2012

புங்குடுதீவு குடிநீர் திட்டத்திற்கு 41 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இரணைமடு குளத்திலிருந்து புங்குடுதீவு வரை குடிதண்ணீர் வழங்கும் திட்டத்திற்காக 41 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இரணைமடு குடிநீர் திட்ட அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக வங்கியின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டப்பணிகள் எதிர்வரும் 2017ம் ஆண்டளவிலேயே நிறைவு பெறும் வாய்ப்புகள் காணப்படுகின்றன என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மக்களே அதிகமாக பயனடைவார்கள் என்று அத்திட்ட அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இத்திட்டத்திற்காக கிளிநொச்சி முதல் புங்குடுதீவு முதல் 23 பெரிய தண்ணீர்த் தாங்கிகளும் 2 சுத்திகரிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

இதைவிட கல்லுண்டாய் வெளி பிரதேசத்திலும் பளைப்பிரதேசத்திலும் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

18 மில்லியன் ரூபா செலவில் 6 நீர்த்தாங்கிகளும் 520 கிலோமீற்றர்குளாய்களும் அமைக்கப்படவுள்ளன எனப்தோட வடமராட்சி உட்பட குடாநாட்டின் சில பகுதிகளில் உவர் நீர் தடுப்பணைகளும் அமைக்கப்படவுள்ளதாகம் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment