சிறுவர் அகதிகளை இளைஞர் அகதிகள் என தடுத்து வைத்திருந்த விவகாரத்தில் சுமார் 40 சிறுவர் அகதிகளுக்கு பிரித்தானிய அரசு 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக செலுத்தியுள்ளது. சிறிய வழக்கு ஒன்றிற்கு பிரித்தானியா அதிக நஷ்டஈடு வழங்கிய விவகாரமாக இது மாறியுள்ளதென பிரித்தானியாவின் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்திட்டமானது சட்டத்திற்கு புறம்பானது என பிரித்தானியா அரசாங்கம் ஏற்றுக் கொண்டதோடு எதிர்காலத்தில் அதனை திருத்திக் கொள்வதாகவும் அறிவித்துள்ளது.
இருந்த போதும் குறித்த சிறுவர் அகதிகள் இன்னும் இளைஞர்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் 16 நாடுகளைச் சேர்ந்த 25 சிறுவர்களும் 14 சிறுமியர்களும் உள்ளடங்குகின்றனர்.
இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈரான், நைஜீரியா, எரித்திரியா, உகண்டா, சோமாலியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சிறுவர் அகதிகள் இதில் உள்ளடங்குவதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகாம்களில் இருப்பவர்களில் இலங்கையைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அவரது நாட்டில் சித்திரவதையில் இருந்து தப்பியவர் எனவும் மேலும் சிலர் வன்முறை, பாலியல் துன்புறுத்தல் என்பவற்றில் இருந்து காப்பாற்றப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிறுவர்களில் நலன்குறித்து தாம் மிகுந்த அக்கறை செலுத்தி வருவதாக பிரித்தானிய எல்லை முகவர் நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment