யாழ்.மாவட்ட கடற்றொழில் அபிவிருத்திக்கு 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத்திணைக்களப் பணிப்பாளர் ஆர்.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து கடற்றொழிலாளர்களும் பயனடையும் வகையில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்குக்கென இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் கடற்றொழிலாளர்களுக்காக இளைப்பாறும் மண்டபங்கள்; மீன் ஏல விற்பனை நிலையங்கள்; மீன் சந்தைகள் உள்ளிட்ட புதிய அபிவிருத்தி திட்டங்கள் இதில் உள்ளடங்குகின்றன.
இவ் அபிவிருத்தி திட்டங்களில் ஏற்கனவே சில திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்னமும் சில அபிவிருத்தி திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்ப்படவுள்ளன. என அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment