இளைஞர் விவகார அமைச்சின் தொழில் வழங்குவதற்கான இணையத்தளம் 4ஆம் திகதி ஆரம்பம்
இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு எதிர்காலத்தில் தொழில் வழங்குவதற்கென புதிய இணையத்தள சேவை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
எதிர்வரும் 4ஆம் திகதி அனுராதபுரத்தில் இடம்பெறும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் வைத்து இந்த இணையத்தள சேவையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைப்பார் என்று அமைச்சர் டலஸ் அழக பெரும தெரிவித்துள்ளார்.
இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் பலர் பணம் கொடுத்து தொழில் பெறவேண்டிய நிலை காணப்படுகிறது. அதனை ஒழித்துக்கட்டுவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இப்புதிய இணையத்தள சேவையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்காட்டியபோது, அதனை இப்போது செய்ய தீர்மானித்துள்ளோம் என்று அங்கு உரை நிகழ்த்திய அமைச்சரமேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment