சிரியாவில், அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிரான போராட்டம் வலுவடைந்துள்ளது. அவர் பதவி விலக கோரி ஹோம்ஸ் நகரில் பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். நேற்று போராட்டத்துக்கு திரண்ட மக்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. அதில், 3 குழந்தைகள் உள்பட 16 பேர் உயிர் இழந்தனர். இவர்கள் அனைவரும் ஹோம்ஸ் நகரில் இருந்து அதன் அருகேயுள்ள பாபா அம்ர் நகருக்கு வெளியேறியவர்கள். இவர்கள் தவிர சிரியாவின் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேரும் கொல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment