Saturday, February 25, 2012

எஸ்.டி.சி யினால் வடமராட்சி கிழக்கில் 300 வீடுகளை அமைக்கப்படவுள்ளன.

சுவிஸ் நாட்டின் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான முகவர் அமைப்பான எஸ்.டி.சி யினால் வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் 300 வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கான வீடுகளை அமைக்கும் பணிகளில் தற்போது அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்திய அரசாங்கமும் ஈடுபட்டுள்ளன.

இதன்படி சுவிஸ் நாட்டின் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான முகவர் அமைப்பு ஏற்கனவே தென்மராட்சி மறவன்புலோவில் பல வீடுகளையும் பாடசாலைகளையும் மலசல கூடங்கள் உள்ளிட்டவற்றை அமைத்துக்கொடுத்திருந்தது.

இதன் தொடர்ச்சியாகவே தற்போது இம்முன்நூறு வீடுகளையும் அமைக்க இந்நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான ஜனாதிபதி செயலணியின் அனுமதியைப்பெறுவதற்கு தற்போது விண்ணப்பித்திருப்பதாகவும் விரைவாக இவ்வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com