ஜெர்மனியில் உள்ள மிகப்பெரிய விமான நிலையம் பிராங்பர்ட் நகரில் உள்ளது. சம்பள உயர்வு கேட்டு சுமார் 200 ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டது. இந்த விமான நிலையத்திற்கு தினமும் சுமார் 1,300 விமானங்கள் வந்து செல்கின்றன. ஸ்டிரைக் காரணமாக நேற்று 172 விமானங்களும், இன்று சுமார் 300 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
இதில் பெரும்பான்மையானவை ஜெர்மனி நாட்டை சேர்ந்த லுப்தான்சா நிறுவன விமானங்கள் ஆகும். ஒரு வாரத்திற்குள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த வாரம் முழு அளவில் ஸ்டிரைக் தொடங்கப்படும் என்று தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment