Monday, February 13, 2012

ஐக்கிய மதப்பேரவை 30 ஆண்டு விழாவை கொண்டாடியது.

உலகில் தோன்றியுள்ள முரண்பாடுகளுக்கும் பிணக்குகளுக்கும் சிறந்த தீர்வு அவரவர் சமயத்தை சரியாகப் பின்பற்றுவதன் மூலமே ஏற்படும். மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகெடுவ தெரிவிப்பு

உலக நாடுகளுடைக்கிடையே நடைபெறும் யுத்தம் மற்றும் முரண்பாடுகளுக்கு ஒரு சரியான முடிவு காணப்பட வேண்மாமுமாயின் அவர்களுடைய சமயத்தையும் அதன் போதனைகளைப் பின்பற்றி தெளிவுடன் நடத்தல் வேண்டும். ஒவ்வொரு நபருக்கும் இனமும் மதமும் அடையாளம். சகல மக்களும் தான் பிறந்த நாட்டுக்கு இனத்திற்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் உள்ளார்ந்த ரீதியாக பற்று வைத்தல் வேண்டும். அது இல்லாவிட்டால் அவன் முழு மனிதனாக அடையாளம் காண முடியாது என்று மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகெடுவ தெரிவித்தார்.

ஐக்கிய மதப் பேரவையின் 30 வது ஆண்டு நிறைவு விழா கண்டி பௌத்த இளைஞர் மன்றத்தின் கேட்போர் கூடத்தில் இப்பேரவையின் தலைவர் இரா. பாஸ்கரன் தலைமையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகெடுவ அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், எந்த மனிதனும் தம் இன அடையாளத்தின் கொள்கைக்கும் மற்றும் விசுவாசம் கொண்ட மனிதர்களுக்கு மதிப்பாளிக்கா விட்டால் முரண்பாடுகள் எழுவதைத் தடுக்க முடியாது. அப்படியாயின் தத்தமது சமய நம்பிக்கைக்கு ஏற்றவாறு நடப்பார்களாயின் ஒருவர் இன்னொருவருக்கிடையயே புரிந்துணவு, பரஸ்பரம் நல்லெண்ணதம் தானாகவே ஏற்படும். இவ்வமைப்பு இந்நாட்டில் நிலவிய கொடிய யுத்த காலகட்டத்திலிருந்து செயற்படுகிறது. இந்நாட்டில் வாழும் சகல மக்களுக்கு ஒற்றுமையை வலியுறுத்தி எடுத்துக் காட்டாக விளங்கும் ஒரு முன்மாதரியான அமைப்பாக இந்த ஐக்கிய அமைப்பு செயற்படுகிறது என்று அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மூவின முக்கிய பிரமுகர்களுடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபீர் ஹாஜியார், கண்டி மாநகர சபை உறுப்பினர்களான இலாஹி ஆப்;தீன், மாத்தலி மரைக்கார் மற்றும் புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வமைப்பில் நீண்ட காலம் பங்காற்றியவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் சிங்களம் தமிழ் முஸ்லிம் ,கிறிஸ்தவ மாணவர்களின் கலை நிகழ்வும் நடைபெற்றது.

இக்பால் அலி.






No comments:

Post a Comment