வன்னியில் 3 மின்பாவனையாளர் நிலையங்களை திறந்து வைத்து சாதனை படைத்தார் சம்பிக்க
யுத்தத்தின் பின்னர் முதன் முறையாக இலங்கை மின்சார சபையின் மூன்று மின் பாவனையாளர் சேவை நிலையங்கள் வன்னயில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கயினால் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளன.
1.6 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இம் மூன்று மின் நிலையங்களும் கிளிநொச்சியிலும் மன்னாரிலும் மூல்லைத்தீவிலுமே நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டன.
மகிந்த சிந்தனையின் கீழ் யுத்தத்திற்கு பின்னர் தேசிய மின்சாரத்தை வடபகுதிக்கு கொண்டு வரும் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாகவே இவை திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும் கிளிநொச்சியில் மக்கள் மீளக்குடியமர்ந்த பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவது தொடர்பாக கிளிநொச்சி அரச அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது
இதில் ஜனாதிபதி புதவல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டன. இங்கு மீளக்குடியமர்ந்த மக்களுக்கு 6 மாதகாலங்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்க அமைச்சர் சம்பிக்க உறுதியளித்தார்.
0 comments :
Post a Comment