ஐ.நா. அணுசக்தி நிபுணர் குழு 2 நாட்கள் தங்கி ஆய்வு செய்ய மீண்டும் ஈரான் சென்றது
ஈரான் அணு குண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கூறி வருகின்றன. இதற்கிடையில் அணு உலையில் யுரேனியம் செறிவூட்டுவதை தொடங்கி விட்டோம் என சமீபத்தில் ஈரான் அறிவித்தது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்த தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்தது. எனவே ஐ.நா. அணுசக்தி நிபுணர்கள் சென்று 2 நாட்கள் தங்கி ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி நிபுணர் குழுவினர் ஹெர்மன் நக்காரிட்ஸ் தலைமையில் இன்று வியன்னாவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு ஈரான் தலைநகர் டெக்ரான் சென்றனர். இக்குழுவினர் 3 வாரத்துக்குள் தற்போது 2-வது தடவையாக ஈரானுக்கு சென்றிருக்கின்றனர்.
0 comments :
Post a Comment