வடமாகாணத்தில் சுகாதார துறையை அபிவிருத்தி செய்வதற்கு 40 புதிய மருத்துவ ஆய்வு கூடங்களையும் 2 பிராந்திய பயிற்சி நிலையங்களையும் அமைப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்காக சர்வதேச நிதியனத்தின் மூலம் 2 பில்லியன் நிதி ஒதுக்கீட்டை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.
இதற்கான வேலைத்திட்டங்கள் கடந்த வருடம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வேலைகள் யாவும் 2015ம் ஆண்டில் நிறைவு செய்யப்படவுள்ளன.
இதன்படி இதற்கான வேலைத்திட்டங்கள் மன்னார் வவுனியா யாழ்ப்பாணம் கிளிநொச்சி யாழ்ப்பாணம் ஆகியமாவட்டங்களில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் கீழ் 5 மாவட்டங்களிலும் 20 வெளிநோயாளர் பிரிவுகளும் 20 சுகாதார அலுவலகங்களும் 40 புதிய ஆய்வு கூடங்களும் 2 பிராந்திய பயிற்சி நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.
வடமாகாணத்தின் சுகாதார துறையை மேம்படுத்தும் நோக்கில் தான் இந்நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு இச்செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment