ஒரு நாளை 24 ஆயிரம் ரூபாவுக்கு போதைப் பொருள் உடகொள்ளும் நபர் கைது
ஒரு நாளைக்கு 24 ஆயிரம் ரூபாவுக்கு ஹெரோயின் போதைப்பொருள் பயன்படுத்தும் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளில் பகல் வேளையில்ஆட்களில்லாத போது நுழைந்து, அங்குள்ள தங்க நகைகள் விலையுயர்ந்த பொருட்களை சந்தேக நபர் நீண்ட நாட்களாக திருடி வந்துள்ளார் .
வெள்ளவத்தை , பயிசிகல்வத்தை பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் “வெள்ளவத்தை வெத்தா” என்று அழைக்கப்படுபவராவார்.
சந்தேக நபர் இதுவரை 20 இலட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான நகைகள் மற்றும் பொருட்களை திருடியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது .
0 comments :
Post a Comment