புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று உள்ளுராட்சி மன்றங்களுக்காக, அடுத்த மாதம் 24 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக, வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக, தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் முதல் வாரத்தில், இது தொடர்பான பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல் திணைக்களம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், 3 ஆயிரத்து 109 வக்காளர்களும், கரைதுறைபற்று பிரதேசத்தில் 21 ஆயிரத்து 113 வாக்காளர்களும், வாக்காளர் இடாப்பிற்கமைய, பதிவுசெய்யப்பட்டுள்ளதாக, மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment