முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் அணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்காக முன்னர் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இந்த தேர்தலுக்கு செல்லுபடியாகுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகளில் வாக்களிப்பு நடவடிக்கைகள் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாமை மற்றும் சீரற்ற காலநிலை ஆகிய காரணங்களால் பிற்போடப்பட்டிருந்தன.
இதற்கான வேட்புமனுக்கள் 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment