விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 24 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 24 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த 24 பேரும் தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் இன்று (01) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் இவோன் பெனாண்டோ, இந்த உத்தரவை பிறப்பித்தார்.
வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் பின் அகதி முகாமில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றிற்கு அறிக்கை ஒன்றை சமர்பித்த இரகசிய பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் தடுப்புக் காவல் உத்தரவில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டதாக இரசிய பொலிஸார் குறிப்பிட்டனர்.
தடுப்புக் காவல் நிறைவடைந்துள்ளதால் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு இரகசிய பொலிஸார் நீதிமன்றை கேட்டுக் கொண்டனர்.
இதளை அடுத்து சந்தேகநபர்கள் 24 பேரையும் மார்ச் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment