24 மில்லியன் செலவில் பாதுகாப்பு செயலரால் மகாஜனக்கல்லூரிக்கு 3 மாடிக் புதிய கட்டிடம
24 மில்லியன் ரூபா செலவில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட மூன்று மாடிகளைக்கொண்ட கட்டிடம் பாடசாலை நிர்வாகத்திடம் நாளைய தினம் சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நண்பர்களின் நிதி உதவியுடன் யாழ்.பாதுகாப்பு படைகளினால் மூன்று மாடிகளுடன் பார்வையாளர் அரங்கு வகுப்பறைகள் உள்ளடங்கலாக இக்கட்டிடம் அமைக்கப்பட்டது.
இக்கட்டிடத்தை யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் விஜயம் செய்யவுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சம்பிரதாயபூர்வமாக கையளிக்கவுள்ளார் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment