Wednesday, February 8, 2012

டோகோ வில் 209 இலங்கையர்களை நட்டாற்றில் விட்ட ஏஜென்டுகளை தேடி வலைவிரிப்பு


கடனாவுக்கு அழைத்துச்செல்லும் போர்வையில், ஆபிரிக்க நாடான டோகோவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட 209 இலங்கையர்கள் அங்கு நட்டாற்றில் விடப்பட்டுள்ளனர். இவ்வாறு இவர்களை விட்டுச்சென்ற ஆட்கடத்தல் முகவர்களைத்தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.

இம்முகவர்கள், மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என, தகவல்கள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைவிடப்பட்டுள்ளவர்கள் ஒருவரிடமிருந்து 5 லட்சம் ரூபா முதல், 15 லட்சம் ரூபா வரை, அறவிட்டுள்ள முகவர்கள் இவர்களை டுபாய், எதியோப்பியாவூடாகவும், இந்தியா, அடிஸ் அபாபாவூடாகவும், டுபாய், எதியோப்பியாவூடாகவும், டோகோ ராச்சியத்தின் லோம் நகருக்கு விமான மூலம் அழைத்து சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

அங்கிருந்து கப்பல் மூலம் கனடாவுக்கு அழைத்துச்செல்வதாக தெரிவித்து, அழைத்து சென்றவர்கள் தலைமறைவாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். லோம் நகரில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 28 இலங்கையர்கள், கட்டுநாயக்க விமான நிலையமூடாக, நேற்று நாடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment