Sunday, February 26, 2012

இலங்கையின் 2011ம் ஆண்டிற்கான குடிசன மதிப்பீடு இன்று முதல் ஆரம்பம்

இலங்கையின் 2011ம் ஆண்டிற்கான குடிசன மதிப்பீட்டு பணிகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 21 நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைiபெறவுள்ளதாக அரச புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் எதிர்கால அபிவிருத்தி திட்டமிடலுக்கு மிகவும் முக்கியமான இக்கணக்கெடுப்பிற்காக யாழ்ப்பாணத்தில் 2 ஆயிரம் புள்ளிவிபரவியல் கணக்காளர்கள் நியமிக்கபடவுள்ளனர்.

இதன்போது வீட்டில் உள்ளவர்கள் தமது உண்மையான தகவல்களை வழங்குவது மிகவும் முக்கியமானதாகும்.குறிப்பாக அடையாள அட்டை இலக்கம் பிறந்த திகதி பிறந்த மாவட்டம் தொழில் தொழில் நுட்க ஆற்றல்கள் உள்ளிட்டவை தொடர்பாக விபரங்களை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. தமிழ், தமிழீழம் என்று வாய் கிழியக் கத்தி, புலிக்கொடி பிடித்து வீரம் காட்டிய புலம்பெயர் தமிழர்கள், விடுமுறைக்கு மட்டும் நாங்கள் இலங்கையர்கள் என்று இரகசியமாக வந்து, விடுமுறையை கழித்து விட்டு போய்விடுகிறார்கள். ஆனால் அவர்களின் ஒருவருக்கும் தமிழீழ மண்ணில் மீண்டும் வந்து வாழ இஷ்டமில்லை. அப்படியாயின் ஏன் இந்த அழிவுக்கு, இன குறைப்பிட்கு புலிகளுக்கு பணம், ஆதரவு வழங்கி எம்மை சிறுமைப்படுத்தி விட்டு, எம்மை நடுத்தெருவில் விட்டுவிட்டு, தாயாக மண்ணை விட்டு வெளிநாடுகளுக்கு திரும்பி விடுகின்றாகள்?
    இனிமேல் காலங்களில் தாயக மண்ணில் மற்றைய இனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஏன் இடமளிக்கிறார்கள்?
    புலிகளுக்கு ஆதரவு காட்டிய தமிழர்கள் தாயக பற்று, தமிழ் பற்றை காட்டும் நேரம் இதுவே.
    எவன் உங்களில் உண்மையான, தன்மானமுள்ள தமிழீழத் தமிழன்?.

    ReplyDelete