Thursday, February 2, 2012

2011 ஆம் ஆண்டில் அதிகளவான சிறுவர் துஷ்பிரயோகங்கள்

இலங்கையில் அதிகளவான சிறுவர் துஷ்பிரயோகங்கள், கற்பழிப்புகள் நடைபெற்ற ஆண்டாக கடந்த 2011ஆம் ஆண்டு உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் அறிக்கைகளின் படி 1085 சிறுவர் துஷ்பிரயோகங்கள், 1503 கற்பழிப்புகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புள்ளி விபரங்களின்படி, 758 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கும், 745 சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில், 22 சிசுக் கொலை, 54 குழந்தை கடத்தல்கள், 10 சிறுவர் கொலை முயற்சி, தாக்குதல் உட்பட 247 வழக்குகள் கடந்த வருடம் நீதிமன்றத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 20000 மேற்பட்ட சிறுவர்கள் குறித்த முறைப்பாடுகள் வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் பல முறைப்பாடு செய்யப்படுவதில்லை எனவும், இதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும், அவற்றையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment