மத்திய கிழக்கு, இந்திய உப கண்டம், மற்றும் சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள டுபாயின் ஓரியன்ட் எக்ஸ்பிரஸ் லையின் கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான ஓ.ஈ.எல் கப்பல் 2008 ஆம் ஆண்டு முதல் இலங்கை துறைமுக அதிகார சபையுடன் இணைந்து செயல்படுகின்றது.
இக்கப்பல் 200 வது தடவையாக கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு விசேட வைபவம் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரியத் பந்துவிக்ரம மற்றும் ஓரியன்ட் எக்ஸ்பிரஸ் லையின் நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு இடையில் விசேட நினைவு சின்னங்களும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
No comments:
Post a Comment