வழக்கு மே 10 ல் விசாரணைக்கு வருகிறது. மாட்டுவாரா ரவி கருணாநாயக்க?
அமெரிக்காவில் சிறைவாசம் அனுபவித்து வரும் வர்த்தகரான ராஜ் ராஜரட்ணத்தினால் அனுப்பப்பட்ட நிதி இலங்கை மத்திய வங்கிக்கு அறிவிக்காது, தனியார் வங்கியொன்றில் வைப்பிலிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிப்பதற்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சந்தர்ப்பத்தில் பிரதிவாதிகளான ரவி கருணாநாயக்க உள்ளிட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அரசாங்க சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், இந்த வழக்கை மே மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு, நீதிபதி சுனில் ராஜபக்ஷ தீர்மானித்தார்.
ராஜ் ராஜரட்ணத்தினால் அனுப்பப்பட்ட சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கை மத்திய வங்கிக்கு அறிவிக்காது, தனியார் வங்கியொன்றில் வைப்பிலிட்டதன் மூலம் அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டதிட்டங்களை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
No comments:
Post a Comment