யாழ் - வன்னி ஆசிரியர்களின் இடமாற்றங்கள் மார்ச் மாதம் 15 முதல் அமுலுக்கு வருகின்றது.
வன்னி மற்றும் யாழ்ப்பாண ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் மார்ச் மாதம் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என வடமாகாண இடமாற்றம் தொடர்பாக கூடத்தில் இன்றைய தினம் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இக்கூட்டம் யாழ்.பொது நுர்லகத்தில் நடைபெற்ற போது இது தீர்மானிக்கப்பட்டதோடு மார்ச் மாதம் 1ம் திகதி இடமாற்றம் பெறும் ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படும் என்று அக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் செயலாளர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர் இலங்கை ஆசிரியர் மற்றும் தமிழர் ஆசிரிய சங்கபிரதிநிதிகள் வடமாகாண கல்விப்பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இடமாற்றம் பெற்றுக்கொள்ளும் ஆசிரியர்களுக்கான பெயர் விபரங்கள் யாவும் வடமாகாண இணையத்தளத்தில் 1ம்திகதி வெளியிடப்படும் என்றும் இவர்களுக்கான இடமாற்றங்கள் யாவும் மார்ச் மாதம் 15ம்திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment