Tuesday, February 7, 2012

150 மில்லியன் ரூபா செலவில் வடபகுதி மின்சார சபைக்கு புதிய கட்டிடம் அமைக்கப்படவுள்ளது

150 மில்லியன் ரூபா செலவில் ஜந்து மாடிகளைகளுடன் இலங்கை மின்சார சபையின் வடமாகாண பிரதிப்பொது முகாமையாளர் காரியாலயம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல்லை இன்றைய தினம் மின்சக்தி எரி சக்தி அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க சம்பிரதாய பூர்வமாக நாட்டி வைத்துள்ளார்.யாழ்.பழைய பூங்காப்பகுதியில் அமையப்பெறவுள்ள இக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றைய தினம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ்,போதனா வைத்தியசாலைப்பணிப்பாளர் திருமதி பாவாணி பசுபதிராஜா அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

18 மாதங்களில் கட்டி முடிக்கப்படதிட்டமிடப்பட்ட இம் ஜந்து மாடிக்கட்டிடமானது அடுத்த வருடம் நடுப்பகுதி முதல் செயற்படமென்று இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment