கடந்த வருட ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் ஜனவரி மாதத்தில் 85 ஆயிரத்து 874 உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளனர் என உல்லாசத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் இதே மாதத்தில் 74 ஆயிரத்து 81 உல்லாச பயணிகளே வருகை தந்தனர் என்றும் இதன் பிரகாரம் உல்லாச பயணிகளின் வருகையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது,
2016 ஆம் ஆண்டில் 2.75 பில்லியன் அமெரிக்க டொலர்களை உல்லாச பயணத்துறை மூலம் பெறுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்காக 25 இலட்சம் உல்லாச பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மேற்கு ஐரோப்பாவிலிருந்து வருகை தந்த உல்லாச பயணிகளின் எணணிக்கை 11.9 வீதத்தினால் அதிகரித்துள்ளது. தெற்காசியாவிலிருந்து வருகை தரும் உல்லாச பயணிகளின் எண்ணிக்கையில் 7.3 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment