இலங்கையின் 64 ஆவது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு நாடுபூராகவுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து 1450 சிறைக்கைதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொதுமன்னிப்பின் கீழ் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் யாழ் சிறைச்சாலையிலிருந்து வெளிவந்துள்ளனர்.
சிறுகுற்றங்களுக்காகவும் சிறைத்தண்டனை விதக்கப்பட்டவர்களும் அபராதம் செலுத்த முடியாமல் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர்களுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளும் விடுதலையானவர்களில் அடங்குகின்றனர்.
யாழ்.சிறைச்சாலையிலிருந்து 4 பேரும் பலாலி விவசாயப் பண்ணையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 4 சிறைக் கைதிகளுமே இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகர் செனரத் பண்டார குறிப்பிட்டுள்ளார். இவர்கள் சிறு குற்றங்களுக்காக கடந்த ஆறுமாத காலமாக சிறைப்படுத்தப்பட்டுருந்ததுடன் தண்டப்பணத்தினை கட்ட முடியாமல் இருந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் சிறையிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன் வீடு செல்வதற்கு மனம் இல்லாதவர்களாக காணப்பட்டுள்ளனர். அதற்கான காரணத்தை தேடியபோது, சிலர் எங்கு சென்று தங்குவதது எனத் தெரியாதவர்களாகவும், தமது சொந்த இடங்களுக்கு செல்லதற்கு பஸ் கட்டணத்திற்கான பணம் கூட இல்லாதவர்களாக காணப்பட்டுள்ளனர்.
பின்னர் இவர்களுக்கான பஸ் கட்டணம் சிறைசாலைக் காவலர்களால் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment