வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் தீவக வீதிகளுக்கு மின்விளக்குகள் பொருத்தும் செயற்றிட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. நயீனாதீவு வேலணை மண்டதீவு அல்லைப்பிட்டி புங்குடுதீவு ஆகிய ஜந்து தீவுகளுக்குமே இவ்வாறு மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ் தற்போது இரண்டு தீவகப்பகுதிகளில் இதன் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதா வேலணை பிரதேச சபைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வேலணையில் இலங்கை மின்சார சபையினரின் உதவியும் 100 மின்விளக்குகள் இதுவரையில் பொருத்தப்பட்டுள்ளன.
இதேவேளை தீவகத்தின் வீதிகளுக்கு மின்விளக்குகள் பொருத்துவதற்காக அரசாங்கம் 14 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment