சி.ஐ.ஏ.க்கு உளவு :ரஷ்ய பொறியாளருக்கு 13 ஆண்டு சிறை!
ரஷ்யாவி்ன் ஏவுகணை திட்ட ரகசியங்களை அமெரிக்க உளவு அமைப்பிற்கு தெரிவித்ததாக ரஷ்யா விண்வெளி பொறியாளருக்கு கோர்ட் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ரஷ்யா தனது ராணுவ உபயோகத்திற்கான ஏவுகணைகளை வடமேற்கு விண்வெளி மையத்தில் தயாரித்து வருகிறது. தற்போது நவீன ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்ய விண்வெளித்துறையின் ப்ளஸ்டெக் பிரிவில் ஏவுகணை சோதனை திட்ட பொறியாளர் விளாடிமிர் நெஸ்டரட்ஸ் என்பவர், விண்வெளி ஏவுகணை திட்டத்தின் டேட்டாக்களை திருடி அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.யிடம் விற்று காசு பார்த்துள்ளார்.
இது தொடர்பாக ரஷ்யாவின் எப்.எஸ்.பி. படையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த பொறியாளர் கைது செய்யப்பட்டார். வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்ட் விசாரணையில் இவருக்கு 13ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment