13 ம் திருத்தத்திற்கு மேலாக செல்வதானால் எதற்காக யுத்தம் புரிந்தீர்கள். ஜேவிபி கேள்வி.
தேர்டீனும் இல்லை தேர்டீன் மைனசும் இல்லையாம்.
13 வது அரசிலமைப்புத் திருத்திற்கு மேலதிகமாக மாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதானால் யுத்தம் செய்தது எதற்காக என்ற கேள்வியை முன்னாள் மக்கள் விடுதலை முன்னிணியின் உறுப்பினர் கே. டி. லால்காந்த கேள்வி ஏழுப்பியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரசாங்கம் வடக்குப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இன்னும் ஆரம்பித்த கட்டத்திலேயே உள்ளது. அரசாங்கத்தின் ஆலோசனையாக முன் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் எதிர்க் கட்சியிடம் சாயம் பூசப்பட்டுள்ளது.
அரசாங்கம் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு ஆரம்பித்த இடத்திற்கு மீண்டும் சென்றுள்ளனர். பாராளுமன்றத் தெரிவுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது அந்த தெரிவுக்குழுக் கூட்டத்திற்கு யாரும் போவதில்லை.
மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றாக இணைந்து செல்வதில்லை.
தற்போது மாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் வழங்கி செயற்படுத்தப்பட்டுள்ளதா? இல்லை. அதற்கு இப்போது சொல்வது ' தர்டீன் மயினஸ்' மாகாண சபை.
அரசியலமைப்பின் படி அதற்குச் சொல்வது மாகாண சபைக்கு அதிகாரம் வழங்க முடியாத மாகாண சபையாகும். அரசிலமைப்பின் படி காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் வழங்க வேண்டும். இன்னும் அது இல்லை. அது வழங்கப்படுவது இலகுவான காரியமும் அல்ல. அதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்த பிரதிபலன் காரணமாகத்தான் அது நிறுத்தப்பட்டது. அதன் உண்மையை எடுத்துக் கொண்டால் அதில் தர்டீனும் இல்லை, தர்டீன் மயினஸ் எனப்படும் வழங்கப்படாத காணி மற்றும் பொலிஸ் அதிகாரமும் இல்லை.
இதற்கு அப்பால் ஜனாதிபதி வாக்குறுதி அளிப்பது எதற்கு? நாங்கள் ஒன்றும் அறியாத 13 வது அரசிலமைப்புத் திருத்தம் பற்றி இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொண்டு தர்டீன் என்று கூறப்படும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் வழங்குவற்கா? இந்த 13வது அரசிலமைப்புத் திருத்தம் பற்றிக் கூறிக் கொண்டு அதிகாரத்தைப் பலப்படுத்துவதாகும்.
0 comments :
Post a Comment