Wednesday, February 22, 2012

பிரபா – ரணில் தேனிலவு ஒப்பந்தத்திற்கு இன்றுடன் 11 ஆண்டுகள்.

இலங்கை வரலாற்றில் மோசமான நிகழ்வாக கருதப்படும் பிரபா- ரணில் ஒப்பந்தம் கைச்சாத்தாகி இன்றுடன் 11 வருடங்கள். இவ்வொப்பந்தமானது அரசியல் வாதிகள், புத்திஜீவிகள் மட்டுமன்றி, அனைத்து தேசப்பற்றுள்ள மக்களையும், வரலாற்றில் தாரை வார்த்த மிக மேசமான போர் நிறுத்த ஒப்பந்தம் என முத்திரை பதித்துள்ளது.

2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி, புலிப் பயங்கரவாதிகள், மகிழ்ச்சியடைந்த தினமான போதிலும், தேசப்பற்றுள்ள மக்களுக்கு ஒரு கவலைக்குரிய தினமாக, அன்றைய தினம் அமைந்தது. புலிப் பயங்கரவாதிகளுக்கு, நாட்டை தரைவார்க்கும் ஒப்பந்தம் அன்றைய தினம் கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி, புலிப் பயங்கரவாதிகளின் கேலிக்கும் கிண்டல்களுக்கும் உட்பட்டு, ராணுவ வீரர்கள், அவற்றை சகித்துக்கொண்டிருக்க வேண்டிய ஒரு நிலை உருவாக்கப்பட்டது.

இன்றும் நாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் மேற்குலக சக்திகளின் தேவைக்கு தலைவணங்கிய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், இவ்வொப்பந்தத்தை கைச்சாத்திட்ட அதன் கண்காணிப்பாளர்களான நோர்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கு தொடர்ந்தும் தலைவணங்கி வருகிறது.

வீரமிகு படைவீரர்களின் தாககுதல்களுக்கு மத்தியில் பின்னடைவுக்குட்பட்ட பயங்கரவாதிகள், வரலாறு முழுவதும் தமது படையினரையும், ஆயுத பலத்தையும் மேம்படுத்திக்கொள்வதற்கு, போர் நிறுத்தம் ஒரு காரணமாக அமைந்தது.

நாட்டை கூறுபோடும் ஒப்பந்தத்துடன், இதனை பாரியளவில் மேற்கொள்வதற்கு, போலி சமாதான பேச்சுவார்த்தைகளும் காரணமாக அமைந்தன. உலகின் பல நாடுகளில் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளின் இறுதியில், நவீன ஆயுதங்களுடன், புலிகள் மீண்டும் போருக்கு தயாராகினர்.

அவர்கள் எடுத்து வந்த எந்தவொன்றையும் பரீசிலனை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்காமல், வடக்கிற்கு எமது படையினரின் ஹெலிகொப்டர்கள் மூலமே, அவர்கள் சென்றமையும், குறிப்பிடத்தக்கதாகும்.

புலிகளை பாதுகாப்பாக அழைத்துச்சென்று, ராணுவ வீரர்களை ஏளனத்திற்குட்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் செயற்பாடு, அவ்வாறு அமைந்திருந்தது, பயங்கரவாதிகள், ராணுவ முகாம்களுக்கு சமீபமாக வந்து கேலியும், கிண்டலும் செய்யும்போது, ராணுவ வீரர்கள் அவற்றை சகித்துக்கொண்டு இருக்க வேண்டிய ஒரு துரதிஷ்டவசமான நிலை, அன்று காணப்பட்டது.

இவ்வொப்பந்தத்தின் பயனாகவே, பாரிய தாரைவார்ப்பு இடம்பெறற்து. அப்போதைய புலனாய்வு தகவல்கள், இதனூடாக கசிந்தன. புலனாய்வு தகவல்கள், புலனாய்வு அதிகாரிகள் மட்டுமன்றி, புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட மிலேனியம் சிட்டி இல்லம் கூட, புலிகளுக்கு ரகசியமாக அமையவில்லை. இந்த பெரும் தாரை வார்ப்பின் பயனாக, மேஜர் முத்தலீப் உட்பட சிறந்த புலனாய்வு அதிகாரிகளை, புலிப் பயங்கரவாதிகள் தமது இலக்குகளாக கொண்டனர். மேலும் 100 கணக்கான முன்னணி புலனாய்வு செயற்பாட்டாளர்கள் கொழும்பு வடகிழக்கின் நகர்ப்பகுதிகளில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அரச புலனாய்வு தகவல்கள், அதே நாட்டின் பயங்கரவாதிகளிடம் சென்ற உலகின் ஓரே நாடாக, இலங்கை வரலாற்றில் இணைந்தது. போர் நிறுத்த ஒப்பந்தம், பல்லாயிரம் சந்தர்ப்பங்களில் மீறப்பட்டு, புலிப் பயங்கரவாதிகள், நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை கொலை செய்தனர்.

புலிகளுக்கு சர்வதேச ரீதியலான அங்கீகாரம், வடக்கு கிழக்கு எல்லை, சம்பூர் போன்ற முக்கிய இடங்களில் புலிகளின் முகாம்களை அமைப்பது ஆகியன, போர் நிறுத்த ஒப்பந்தத்தினால் புலிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதங்களாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், நாட்டை கூறுபோடும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, வடுவாக காணப்பட்ட பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டை மீட்டெடுக்காவிடின், வடக்கு கிழக்கு மட்டுமல்லாமல், முழு நாடும் பயங்கரவாதத்திற்கு இரையாகியிருக்குமென்பதில், எவ்வித ஐயமுமில்லை................................

No comments:

Post a Comment