Friday, February 10, 2012

சிரியாவில் ராணுவம் குண்டு வீச்சில் ஒரே நாளில் 105 பேர் பலி

சிரியா நாட்டில் அதிபர் பஷர்அல் ஆசாத் பதவி விலக வற்புறுத்தி 11 மாதங்களாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் ஆயுதம் ஏந்தி போராடுகின்றனர். அவர்களை ஒடுக்குவதற்காக அதிபர் பஷர்அல்ஆசாத் ராணுவத்தை ஏவி விட்டுள்ளார்.

சிரியாவில் உள்ள ஹாம்ஸ், எத்திலிப், சபாதனி ஆகிய நகரங்கள் எதிர்ப்பாளர்களின் பிடியில் உள்ளது. இந்த நகரங்களை மீட்பதற்காக ராணுவம் கடுமையாக தாக்கி வருகிறது. பீரங்கி படைகளும், டாங்கி படைகளும் முற்றுகையிட்டு தாக்கி வருகின்றன.

ராக்கெட் குண்டுகளும் வீசப்படுகின்றன. 105 பேர் பலி ஹாம் நகரில் நடத்திய தாக்குதலில் நேற்று ஒரே நாளில் 95 அப்பாவி மக்கள் பலியானார்கள். இதே போல எத்திலிப், சபாதனி நகரங்களிலும் ஏராளமானோர் பலியாகி இருக்கிறார்கள். நேற்று மட்டும் 105 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து 3 நகரங் களிலும் குண்டுமழை பொழிந்து வருகிறார்கள். இதனால் அங்குள்ள கட்டிடங்கள் தீப்பற்றி எரிகின்றன. சிரியாவின் தாக்குதலுக்கு ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக தாக்குதலை நிறுத்தி அமைதியை நிலைநாட்டும்படி அவர் வற்புறுத்தி உள்ளார். சிரியாவில் இருந்து ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து தூதரகங்கள் மூடப்பட்டு விட்டன. மேலும் பல நாட்டு தூதரகங்களும் மூடப்பட்டு வருகின்றன. ஜெர்மனி தனது நாட்டில் இருந்து சிரியா தூதரக அதிகாரிகள் 4 பேரை வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment