இந்தோனேஷியாவில் போலியான தன்னியக்கப் பணப்பரிமாற்று அட்டையைப் பயன்படுத்தி 100 மில்லியன் ரூபா பண மோசடி செய்த இரு இலங்கையர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த கே.பி. என்னும் முதற்பெயரை உடைய ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதாகவும் அப்போது இவர் 64 மில்லியன் ரூபா பணத்தையும் 25 போலி தன்னியக்கப் பணப்பரிமாற்று அட்டைகளையும் உத்தியோகபூர்வ புகலிடம் கோருவோருக்கான அடையாள அட்டையையும் வைத்திருந்தாகவும் பொலிஸார் கூறினர்.
இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த எம்.கே. என்னும் முதற்பெயரை உடைய ஒருவர் மறுநாள் கைது செய்யப்பட்டதாகவும் இவர் இந்தோனேஷியாவின் போலி அடையாள அட்டையை வைத்திருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment