கள்ள மரக்கடத்தலில் ஈடுபட்டுவந்த TNA உறுப்பினரைத்தேடி பொலிஸார் வலைவிரிப்பு.
வவுனியா பிரதேசத்தில் பாரியளவில் இடம்பெற்று வந்த பாரிய கள்ள மரக்கடத்தல் ஒன்று கடந்த 24ம் திகதி முறியடிக்கப்பட்டுள்ளதுடன் அதிர்ச்சித் தகவல் ஒன்றும் வெளிவந்துள்ளது. கடந்த 24ம் திகதி அதிகாலை வவுனியா முல்லைக்குளம் பிரதேசத்தில் டிரக்டர் ஒன்றை இராணுவத்தினர் மறித்தபோது அதிலிருந்த மூவர் தப்பியோடியுள்ளனர். 49-6638 என்ற இலக்கம் கொண்ட டிரக்டரை கைப்பற்றிய படையினர் அதில் ஏற்றி வரப்பட்டிருந்த 40 முதிரைக் கட்டைகளையும் மரம் அறுக்கும் வாள்களையும், இரு துவிச்சரக்கர வண்டிகளையும் வவுனியா பொலிஸாரிடம் கையளித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் தலைமையிலேயே குறிப்பிட்ட கள்ளமரக்கடத்தல் வியாபாரம் இடம்பெற்று வந்துள்ளதை கண்டு பிடித்துள்ளனர்.
சந்தேக நபரான பிரதேச சபை உறுப்பினரை கைது செய்வதற்கான பொலிஸார் வலைவிரித்து தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.
1 comments :
கள்ளக் கடத்தல், ஆட் கடத்தல், தூள் கடத்தல் என்பனதானே தமிழ் விடுதலையின் முக்கியமான போராட்டப் பகுதிகள். சம்பந்தன் அல்லது சுமந்திரன் அந்த ஆளைப் பிணை எடுப்பார்களா அல்லது அம்போ என்று விட்டு விடுவார்களா?
Post a Comment