யாழ்.சிறைக்கைதிகளை கொண்டு விவசாயம் செய்ய நடவடிக்கை. R.M செனரத் பண்டார
யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் சிறைக் கைதிகளைக் கொண்டு யாழில் விவசாயம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஆர்.எம். செனரத் பண்டார தெரிவித்துள்ளார். யாழ்.சிறைச்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்
இவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் கல்வி அறிவை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு கல்வி புகட்டப்படவுள்ளது அத்தோடு கணனி அறிவும் கொடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் கைதிகளின் நலன்களைப் பேணுவதற்காக இரண்டு நலம்புரி உத்தியோகத்தர்கள் இருவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சிறையில் தடுத்துள்ளவர்களைப் பார்வையிட வராதவர்களின் உறவினர்களோடு தொடர்வை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment