Red Colour of Tea நூல் வெளியீடு
பெருந்தோட்ட மக்களின் குறிப்பாக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் அரசியல், சமூக, பொருளாதார நிலமை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைவர் பி.பி. சிவபிரகாசம், மற்றும் கலாநிதி சந்திரபோஸ் (திறந்த பல்கலைழகம்) ஆகியோரால் எழுதப்பட்ட ஆய்வு நூலான 'Red Colour of Tea' 24ம் திகதி கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வு 24ம் திகதி மாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கௌரவ அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைபாட்டு அமைச்சர் கலந்துக்கொண்டமை குறிப்பிடதக்கது. இந்நூல் வெயியீட்டு விழாவில் பிரான்ஸ் தூதுவராலய இலங்கைக்கான வதிவிட பிரநிதி கௌரவ திருமதி. கிறிஷ்டி அவர்களும், வெளிநாட்டு பிரமுகர்களும், பல்கலைகழக பேராசியரியர்களும் பல அரச சார்பற்ற நிறுவனங்களை சாந்த பிரமுகர்களும், ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.
முதலாவதாக நூல் தொடர்பான அறிமுகத்தினை மனித அவிவிருத்தி தாபன தலைவரும் இப்புத்தகத்தின் சம ஆய்வாளகுமான பி.பி. சிவபிரகாசம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து நூல் விமர்சனத்தினை பேராதனை பல்கலைகழக சமூகவியல் பேராசிரியர் காலிங்க டியூடர் சில்வா வழங்கியிருந்தார். நூலின் மற்றுமொரு ஆய்வாளரான இலங்கை திறந்த பல்கலைகழக விரிவுரையாளர் கலாநிதி சந்திரபோஸ் நூல் தொடர்பான சுருக்கத்தினை வழங்கியினார்.
பின்னர் நூலின் பிரதிகளை வழங்கி வைக்கும் வைபவம் இடம்பெற்றது. முதலாவது பிரதி மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைவரால் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏனையவர்களுக்கு பிரதிகள் வழங்கப்படன. இறுதியாக கௌரவ அமைச்சர் உரையில் மலையக மக்களும் இந்நாட்டின் கௌரவமான பிரஜைகள் எற்றுகொள்வோதோடு அவர்களின் அபிவிருத்திக்கு சகல விதமான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment