JVP-LTTE கூட்டுச்சதியே பல்கலைக்கழகங்களில் ஏற்படும் குளறுபடிகள். புலனாய்வுத்துறை
பல்கலைக்கழக முறைமையை சீர்குலைத்து, மாணவர் மத்தியில் குழப்ப நிலையை ஏற்படுத்துவதன் மூலம், நாட்டை சீர்குலைக்கும் சூழ்ச்சி தொடர்பான தகவல்கள், அம்பலமாகியுள்ளன. ஜே.வி.பி. யிலிருந்து பிரிந்து சென்ற கிளர்ச்சிக்குழு, மக்கள் போராட்டம் என்ற பெயரில் இந்த சூழ்ச்சியை, முன்னெடுத்துள்ளதாக, புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது.
ஜே.வி.பி. யுடன் தொடர்புடைய அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, இந்த சூழ்ச்சியை திட்டமிட்டுள்ளது. பகிடிவதையினூடாக, குழப்பநிலையை ஏற்படுத்துவதே, சூழ்ச்சிக்காரர்களின் அடிப்படை நோக்கமாவுள்ளது. பேராதனை, ஜயவர்தனபுர, ரஜரட்ட மற்றும் றுஹூணு பல்கலைக்கழகங்களில் பகிடிவதை பரவலாக இடம்பெறுகின்றது.
ஜே.வி.பி.யுடன் தொடர்புடைய சில மாணவர்கள், ஜே.வி.பி. யையும், கிளர்ச்சி அணியையும் இனங்காண முடியாமல், இவ்வலையில் அடித்துச்செல்லப்படுவதை போன்று, இந்த ஆர்ப்பாட்டங்களில் தொடர்புபட்டுள்ளதாக, பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளர் என தெரிவித்துக்கொள்ளும் சஞ்சீவ பண்டார என்பவர், ஜே.வி.பி. யின் கிளர்ச்சிக்குழுவில் இணைந்துள்ளார். ஜே.வி.பி. கிளர்ச்சிக்குழுவின் மறைந்திருக்கும் தலைவர் குமார் குணரட்னத்தின் திட்டங்களுக்கு ஏற்ப, மாணவர் போராட்டங்களை மேற்கொள்வதாக, செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.
குமார் குணரட்னம் 87-89 காலப்பகுதியில் ஜே.வி.பி. ஆயுத பிரிவின் திருகோணமலை தலைவராகவும், எல்ரிரிஈ ஆயுத பிரிவின் முக்கிய பாயங்கரவாதியான ரஞ்சிதம் குணரட்னத்தின் சகோதரருமாவார். குமார் குணரட்னமும், ஜே.வி.பி. ஆயுத பிரிவின் மறைந்திருக்கும் தலைவராக நீண்டகாலம் செயற்பட்டுள்ளார்.
நாட்டை அராஜக நிலைக்கு உட்படுத்தும் எல்ரிரிஈ புலம்பெயர் தமிழர்களின் தேவைகளையும், குமார் குணரட்னமூடாக, பல்கலைக்கழக தொகுதியில் நிறைவேற்றுவதற்கு, சஞ்சீவ பண்டார போன்ற சமூக விரோதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, புலனாய்வு பிரிவு தெரிவிக்கிறது.
அண்மையில் ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் நினைவுதூபி மீது குண்டு தாக்குதல் நடாத்திய சம்பவத்தின் பின்னணியில் ஜே.வி.பி. கிளர்ச்சியாளர்களும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பும் இருப்பதாக, சந்தேகம் எழுந்துள்ளது.
அதிகாலை 03.00 மணியளவில் இக்குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டதும், அதிகாலை 05.00 மணி முதல் பாரிய சுவரெட்டிகள் ஒட்டப்பட்டு, காலையில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டமையும், நியாயமான சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
பல்கலைக்கழக கல்வியுடன் தொடர்புடைய கோரிக்கைகளின்றி, அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழக மாணவர்களை வீதியில் இறக்கி, பாதுகாப்பு தரப்பினருடன் மோதல்களை ஏற்படுத்தி, மாணவர் படுகொலைகளுடாக அரசாங்கத்திற்கும், நாட்டுக்கும் எதிராக பிழையான கருத்துகளை சர்வதேசத்தில் ஏற்படுத்துவதே, போலி ஆர்ப்பாட்டங்களின் நோக்கமாகவுள்ளதென, செய்திகள் தெரிவிக்கின்றன.
நிறைவேற்ற முடியாத பயங்கரவாத கனவை, தென்பகுதி மாணவர்கள், மற்றும் வடபகுதி இளைஞர்களுடாக நிறைவேற்றுவதே, எல்ரிரிஈ சார்பான வேலைத்திட்டமென, பாதுகாப்பு தரப்பினர் அம்பலப்படுத்தியுள்ளனர். இதனால், தமது பிள்ளைகள் தொடர்பாக, மிக கரிசணையுடன் செயற்படுமாறு, பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்களிடம், பாதுகாப்பு தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment