கொழும்பு-காத்தான்குடி பஸ்ஸில் பெரிய கல்லாற்றைச் சேர்ந்த ஒருவருடைய சடலம் மீட்பு
இன்று காலை கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிப் புறப்பட்ட போக்குவரத்துச் சபைக்கு செந்தமான பஸ்ஸில் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. பெரிய கல்லாற்றைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக இலங்கைப் போக்குவரத்துச் சபை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 10.30மணியளவில் புறக்கோட்டை பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து காத்தான்குடி நோக்கிப் புறப்பட்ட குறித்த பஸ் சுமார் 11.20 மணியளவில் ஒறுகொடவத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் நிரப்புவதற்கு நிறுத்தப்பட்ட வேளை, பஸ்ஸின் பின்புறத்தில் பிரயாணி ஒருவர் மயக்க நிலையில் இருப்பதாக பயணிகள் பஸ் சாரதிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஒறுகொடவத்தைப் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து பொலிஸாரின் உதவியுடன் குறிப்பிட்ட நபர் கொழும்பு பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படடுள்ளார்.
மருத்துவ பரிசோதனையைத் தொடர்ந்து, வைத்தியர்கள் குறித்த நபர் உயிரிழந்துள்ளமையை உறுதிப்படுத்தியுள்ளனர்
இவ்வாறு பஸ்ஸில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டவர் பெரிய கல்லாற்றைச் சேர்ந்த தம்பிராசா புவிராஜ் (வயது 50) என் அடையாளம் காணபட்டதுடன் இது குறித்து அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment