அரசியல்வாதிகளின் தலையீட்டினால் நீதியை நிலைநிறுத்த முடியவில்லை. சட்ட மா அதிபர்.
அரசியல்வாதிகளின் தலையீட்டினால் கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியவில்லை என சட்ட மா அதிபர் ஈவா வனசுந்தர தெரிவித்துள்ளார். உள்ளுர் அரசியல்வாதிகள் அடிக்கடி தம்மை சந்திக்க முயற்சிப்பதாகவும், தமது கடமைகளில் தலையீடு செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தங்காலை பிரதேசசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் இவ்வாறு தமது கடமைகளில் குறுக்கிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
தமது சட்டத்தரணியை சந்திக்காது நேரடியாக தம்மை அரசியல்வாதிகள் அடிக்கடி சந்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் குறித்த அரசியல்வாதிகளுக்கு அடிப்படை தகுதி கிடையாது என்பது புலனாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் பதவி வகித்த சட்ட மா அதிர்பகளும் இந்த நிலைமைக்கு ஓர் காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த காலங்களில் பதவி வகித்த சட்ட மா அதிபர்கள் இந்த வழக்கத்திற்கு அனுமதியளித்திருந்தனர் எனவும், தற்போது அரசியல்வாதிகள் இதனை தமது உரிமையாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய முறையில் கடமைகளை மேற்கொள்ள அரசியல்வாதிகள் இடமளிப்பதில்லை எனவும், அவர்களும் தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்வதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment