சிங்கள பேரினவாதிகளை எதிர்த்து யாழில் நாளை ஆர்ப்பாட்டம்
சிங்கள பேரினவாதிகளின் வருகையை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் நாளை ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. சமாதானத்தை விரும்பும் யாழ்.மக்களால் இந்த ஆர்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.சிங்கள பேரினவாத சக்தியான ஜே.வி.பியிலிருந்து அண்மையில் பிளவுபட்ட மக்கள் போராட்ட இயக்கும் என்னும் ஜே.வி.பி யினரின் பிரிவினைவாத சக்தியை எதிர்த்தே மக்கள் இப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் ஊடுருவி மக்களின் இயல்பு நிலையையும் யாழ்.பல்கலைக்கழகத்தின் சமாதானத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் இவர்கள் செயற்படுவதாகவும் இதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் கோரியே இவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பேரினவாதிகளான ஜேவிபி யினர் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களமக்களிடையே இனவாதத்தை விதைத்து வந்தனர். தற்போது இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றபோது, இவர்கள் சிங்கள மக்களுக்கு ஊட்டிய தவறான கருத்துக்களின் வெளிப்பாடுகள் இனப்பிரச்சினை தீர்வுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.
இந்நிலையில் ஜேவிபி யினர் செய்யவேண்டியது யாதெனில், தேசிய பிரச்சினையில் தங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக கூறவேண்டும்.
மாறாக அவர்கள் வட கிழக்குக்கு படையெடுத்து மக்களை மீண்டும் தவறான வழிக்கு தூண்டுகின்றனர்.
0 comments :
Post a Comment