Saturday, January 21, 2012

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யுவதிகளை சுயதொழில் பயிற்சிக்கு இந்தியா அனுப்ப ஏற்பாடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யுவதிகளின் வாழ்வாதாரம் மற்றும் சுயதொழில் என்பவற்றை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்றிட்டத்தின் கீழ் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 800 இளம் யுவதிகளை இந்தியாவுக்கு சுயதொழில் பயிற்சிக்காக அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட இன்யுவதிகளின் இந்தியாவின் அஹமதாபாத் மற்றும் குஜராத் ஆகிய பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சி பெறுவதற்கு செல்வதற்கான விமானப் பயணச்சீட்டுக்களை இன்று காலை சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார்.

கடந்த வருடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment