Friday, January 27, 2012

புலம்பெயர் புலிகளின் முகத்தில் குத்திய பான் கீ மூன். சவேந்திர அமைதி காக்கும் படையில்.

இலங்கையில் போர்க்குற்றம் செய்தவர் என புலிகளால் வர்ணிக்கப்படுகின்ற ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படைகளின் செயற்பாடுகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு ஐ.நா.செயலாளர் பான் கீ மூனினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா. அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு படைகளை அனுப்பும் நாடுகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஐ.நாவின் அமைதிப் படை நடவடிக்கைகளில் இலங்கை கடந்த 50 வருடங்களாக பங்கேற்று வருகின்றபோதும் இத்தகைய பதவியொன்றுக்கு இலங்கையர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.

இவர் இவ்வாலோசனைக் குழுவில் ஆசிய – பசுபிக் விவகாரங்களுக்கு பொறுப்பாக இருப்பார்.

ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் நாயகங்கள், கனடாவின் பாதுகாப்புத் துறை முன்னாள் பிரதி அமைச்சர் Louise Frechette, ஐ.நா அமைதிப் படை நடவடிக்கைகளுக்கான முன்னாள் தலைமை அதிகாரி Jean-Marie Guehenno, அமெரிக்காவின் முன்னாள் உதவி வெளிவிவகார அமைச்சர் James Dobbins ஆகியோரும் இவ்வாலோசர் குழு அங்கத்தவர்களாக நியமனம் பெற்று உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புலம்பெயர் புலிகள் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்குற்றங்கள் தொடர்பாக விசாரணை ஒன்று ஐ.நாவினால் மேற்கொள்ளப்படவேண்டும் என புலிகள் கோருகின்றனர். புலிகளால் போர்குற்றம் புரிந்தவர்கள் என குற்றஞ்சுமத்தப்படுகின்ற நபர்களின் முன்னணியில் இருப்பவர் மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வா. இந்நிலையில் ஐ.நா வின் செயாலாளரினால் வழங்கப்பட்டுள்ள இவ்நியமனம் புலிகளின் கனவை தவிடு பொடியாக்கியுள்ளது என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

1 comments :

ஆர்யா ,  January 27, 2012 at 10:32 PM  

இது ஒரு நல்ல நடவடிக்கை , ஐநா இலங்கை தொடர்பாக நல்ல கருத்தை கொண்டிருப்பதற்கு இது ஒரு சான்று , புலிகளால் தமிழ் ஈழம் மட்டுமல்ல ஒன்றையும் அடைய முடியாது. புலம் பெயர் தமிழர் இனியாவது திருந்த வேண்டும். விடுமுறையில் இலங்கை செல்வதும் பின் புலம் பெயர் தேசத்தில் இலங்கை அரசுக்கு எதிராக ஐநா முன் கோவணம் ( புலி கொடி) பிடிப்பது , மாவீரர் தினத்துக்கு போவது போன்றவற்றை நிறுத்தி , பாதிக்கபட்ட மக்களுக்கு உதவுவதுடன் , புலி பினாமிகளை தவிர்க்க வேண்டும்.
திருந்துவார்களா ???????????????????

நட்புடன் ஆர்யா

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com