தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக யாழ். மக்கள் ஹர்த்தாலில் ஈடுபட்டனர்...
யாழ் சாவக்கச்சேரியில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு இன்று ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிருவாகத்திலுள்ள சாவக்கச்சேரி பிரதேச சபையின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே தாங்கள் கடையடைப்பை நடத்தியதாக சாவக்கச்சேரி வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இக்கடையடைப்பிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பல்வேறு இடைஞ்சல்களும் குறுக்கீடுகளும் ஏற்படுத்தப்பட்டன. நகர பிதா தேவ சகாயம் பிள்ளை, வர்த்தகர்கள் மீது மேலதிக வரிச்சுமையை சுமத்தியுள்ளதாக, குற்றஞ்சாட்டினர்.
வர்த்தக நிலையங்களில் பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்துவதற்கும், சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள்களும், துவிச்சக்கர வண்டிகளும் ஒரே இடத்தில் நிறுத்தப்பட வேண்டுமென்றும், அதற்கு கட்டணம் செலுத்த வேண்டுமென்றும், சாவகச்சேரி மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான 9 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் உட்பட அக்கூட்டமைப்பின் பிராந்திய தலைவர்கள், சாவகச்சேரி வர்த்தக சங்கத்திடம் விடுத்த சகல கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு, இணக்கம் தெரிவிக்கப்பட்டமையினால், நாளைய தினம் நகரின் சகல பணிகளும், வழமை போல் இடம்பெறச்யெவதற்கு, நடவடிக்கை எடுக்க, சாவகச்சேரி வாத்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
0 comments :
Post a Comment