புலி ஆதரவாளர்கள் இடைமறித்தனர்: யாரும் தாக்கவில்லை
விசேட யாகம் ஒன்றினை செய்வதற்காக இந்தியாவிற்கு சென்றுள்ள திருக்குமாரன் நடேசனை தமிழ் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் தாக்கியதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில், இராமேஸ்வத்தில் வைத்து தாக்கியதாக கூறப்படும் சம்பவம் உண்மைக்குப் புறம்பானது என பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ்வின் கணவரான நடேசன் தெரிவித்துள்ளார்.
என்னை யாரும் தாக்கவில்லை. ஆயினும் பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு விடுதலைப் புலி ஆதரவாளர்கள் சிலர் தடையாக இருந்தனர். வழிபாட்டிற்காக சென்ற என்னை இடைமறித்து, சுற்றிவளைத்து கோஷங்களை எழுப்பினர் என ரி. நடேசன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment