உள்ளுராட்சி மன்ற மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு, ஐக்கிய தேசியக் கட்சி, ஆதரவு.
எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உள்ளுராட்சி மன்ற மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு, ஐக்கிய தேசியக் கட்சி, ஆதரவு வழங்குவதாக, கட்சியின் பொது செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்ற சீர்த்திருத்த சட்டமூலம் தொடர்பாக, எமக்கு கொள்கை அளவிலான இணக்கப்பாடு உண்டு. உள்ளுராட்சி மன்ற தேர்தலில், விகிதாசார முறையும், தொகுதி வாரி முறையும் இணைந்த புதிய தேர்தல் முறை, அவசியமென்பதை, ஐக்கிய தேசியக் கட்சியும் தீர்மானித்துள்ளது. இந்த சட்டமூலம் தயாரிக்கப்படும்போது, நாம் அதற்கு ஆதரவு தெரிவித்தோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment