இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளன.
மத்திய கிழக்கு பேச்சுவார்த்தையின் மத்தியஸ்தர்களாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா மற்றும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் ஆகியன செயற்படுகின்றன. சமாதான பேச்சுவார்த்தையி;ல் மத்தியஸ்தர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் இருதரப்பையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸ் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
முன் நிபந்தனையின்றி இஸ்ரேல் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருப்பதாக இஸ்ரேல் அரசாங்கத்தின் ஊடக பேச்சாளர் மார்க் ரெகெவ் தெரிவித்துள்ளார்.
இதே வேளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன சமாதான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தர்கள் பங்குபற்றும் விசேட சந்திப்பொன்று ஜோர்தானில் இடம்பெறவுள்ளதாக ஜோர்தான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment