கருணாவை புலிகளிடம் காப்பாற்ற தமிழ்நாடு அனுப்பிய சந்திரிகா!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து உடைந்த கருணா இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்துக்கு தப்பிச் செல்கின்றமைக்கு இலங்கையின் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க உதவி செய்து இருக்கின்றார். 2004 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இருந்து சுமார் 4000 உறுப்பினர்களுடன் கருணா பிரிந்தார்.
இந்நிலையில் பாரிய பிரச்சினைகள் வெடிக்கக் கூடும் என்று எண்ணினார் சந்திரிகா. கருணாவை தமிழ்நாட்டுக்கு அனுப்புகின்றமையில் முன்னால் நின்று செயல்பட்டார். 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை கருணா தமிழ்நாட்டில் தங்கி இருந்திருக்கின்றார்.
ஆனால் கருணா நாட்டுக்கு மீண்டு வந்து ஒரு வருடத்துக்கு இடையில் அவரது அணி மிக வலிமையான துணை ஆயுதக் குழுவாக மாறி விட்டது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment