உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் அனுர எதிரிசிங்கவிடம் விசாரணை
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்கவிடம் விசாணை செய்துள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, மாவட்ட ரீதியான நிரப்படுத்தலில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தொடர்பில் அவரிடம் விரிவாக விசாரிக்கப்பட்டதாக குழுவின் தலைவர் டாரா விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் 16 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் சட்ட செயலாளர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதா ? என்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும், பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளின் போது முறையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா? அல்லது இதற்கு வேறு காரணங்கள் காணப்படுகின்றனவா? என்பது தொடர்பிலும் விசாரணைகளின் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் செயலாளர்மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment