Thursday, January 5, 2012

அழகிய பெண்ணாக மாறிய உலகில் உயரமான பாஸ்கட்பால் விளையாட்டு வீரர்

இங்கிலாந்தில் 25 வயது விளையாட்டு வீரர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தின் பாஸ்கட் பால் வீரர் கிரெக். உலகில் உயரமானவர் என்ற சிறப்பு கொண்டவர். இவருடைய உயரம் 7 அடி. சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக கிரேக் மாறியது விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் தனது பெயரையும் லின்ட்சே என்று மாற்றிக் கொண்டுள்ளார். 25 வயதான லிண்ட்சே தன் அற்புதமான விளையாட்டு திறமையால் ஏராளமான ரசிகர்களை கொண்டவர்.

வாட்டசாட்டமான வித்தியாசமான உடல் மற்றும் மனப்போக்கு கொண்டவர். பள்ளி பருவத்தில் இருந்தே இவருக்கு ஆண் நண்பர்களை விட பெண் நண்பர்களே அதிகம் என்கிறார்.

பள்ளி படிப்பில் மட்டுமன்றி விளையாட்டிலும் பிரபலமாக இருந்துள்ளார். தனது 18வது வயது முதல் தன்னை பெண்ணாகவே உணர தொடங்கியதாக கூறும் லிண்ட்சே, இதனை தன் குடும்பத்தாரிடம் தெரிவித்த போது பலத்த எதிர்ப்பு எழுந்ததாக வருத்தத்துடன் கூறுகிறார். எனினும் பிடிவாதமாக இருந்த இவர் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியுள்ளார்.

தற்போது பெண்மைக்கே உரித்தான ஈஸ்ட்ரோஜன் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். தன் விருப்பம் நிறைவேறிய மகிழ்ச்சியில் உள்ள லிண்ட்சே, விளையாட்டையும் தொடர போவதாக தெரிவித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com