மீண்டும் யாழ் - கொழும்பு பயணிகள் விமான சேவை ஆரம்பம்!
கொழும்பு யாழ் விமானச்சேவையை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக expo aviation நிறுவனம் அறிவித்துள்ளது. நாளொன்றுக்கு இரண்டு சேவைகளை நடத்தவுள்ளதாகவும், இதற்கு 12 ஆசனங்களைக் கொண்ட விமானங்களை பயன்படுத்தவுள்ளதாகவும் எக்ஸ்போ எவியெசன் நிறுவனம் அறிவித்துள்ளது.
விமான சேவையை ஆரம்பிக்க குடியியல் விமான சேவை அதிகாரசபையின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், எக்ஸ்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏ-9வீதி திறக்கப்படுவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு நாளொன்றுக்கு சுமார் 200பேர் விமானம் மூலம் பயணம் செய்து வந்தனர்.
தற்போது ஏ-9வீதி திறந்து விடப்பட்டுள்ள நிலையில் நாளொன்றுக்குத் தேவைப்படும் விமானப் பயண ஆசனங்களின் எண்ணிக்கை 36ஆக குறைந்துள்ளதாகவும் expo aviation நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
0 comments :
Post a Comment