Tuesday, January 10, 2012

பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியை அபகரிக்க முயன்ற நபருக்கு பிணை

தேவாலயத்துக்கு சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட நபரை நீர்கொழும்பு பிரதான நீதவான் 7500 ரூபா ரொக்கப்பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார் .

சீதுவை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார். சீதுவை பொலிசார் சந்தேக நபரை மன்றில் ஆஜர் செய்தனர்.

சீதுவை அமன் தொழுவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இந்த வழக்கின் முறைப்பாட்டாளராவார்.

2012 ஜனவரி முதலாம் திகதி வழக்கின் முறைப்பாட்டாளர் தனது நண்பியுடன் ராகமையில் உள்ள தேவாலயத்துக்கு சென்று கொண்டிருக்கும் போது, சீதுவை அமன்தொழுவ பிரதேசத்தில் வைத்து சைக்கிளில் வந்த சந்தேக நபர் முறைப்பாட்டாளர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை கொள்ளையிட்டு செல்ல முயன்றுள்ளார் என்று வழக்கின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com