Saturday, January 7, 2012

இணக்க அரசியலில் இணைந்தவர்களுடன் இணங்க மறுக்கும் டக்ளஸ் பொய்ப் புகார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தான் இணக்க அரசியல் செய்வதாக கூறிவருகின்றார். ஆனால் அவர் இணக்க அரசியலில் இணைகின்றவர்களுக்கு வில்லனாகவே செயற்பட்டுவருவதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றது.

மத்தியில் ஆழும் தரப்புடன் நேரடித்தொடர்புகளை பேணுகின்ற டக்ளஸ் மாநிலத்தில் அனைவரும் தனது காலுக்கு கீழே நிற்கவேண்டும் என அடம்பிடித்து நிற்கின்றார்.

ஆனால் டக்ளசின் காலுக்கு கீழ் நிற்க ஏற்புடையோர் நிற்கின்றார்கள், இல்லாதோர் எடுத்த முடிவுகள் அன்று புலிகளை பலப்படுத்தியது இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துகின்றது.

இலங்கை அரசியல் யாப்பு அதன் பிரைஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள தான் விரும்பும் அரசியல் கட்சி ஒன்றை தெரிவுசெய்யும் உரிமைக்கு ஆப்பு இறுக்கிய புலிகள் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்காமலே தாம் தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றார்கள், இவ்விடயத்தில் புலிகளுடன் நேரடியாக மோத முடியாத டக்ளஸ் பிரபாகரன் தேர்லுக்கு வந்தால் நான் வழிவிட்டு சென்றுவிடுவேன் என நேரகரம்நீட்டி கும்பிடுதொட்டான் அறிக்கைகளை விட்டுக்கொண்டு , புலி எதிர்பாளர்கள் அல்லது தேசிய அரசியலுடன் இணைகின்றவர்களுக்கு தானே ஏக பிரதிநிதியாக முனைவதானது தேசிய அரசியலில் இணைகின்றவர்களை அல்லது இணைந்தவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாசிச அரசியலினுள் வலிந்து தள்ளும் செயலாகும்.

கடந்த யாழ் மாநகரசபைத் தேர்தலில் வலிந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினுள் நுழைந்து கொண்ட டக்ளஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்துவ கட்சிகளின் உறுப்பினர்களை மிரட்டி ஒதுக்கிய சம்பவங்கள் ஏராளம்.

இத்தனை சவால்களையும் தாண்டி கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில், சிறி லங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிட்டவர் நிசாந்தன். அவர் தேர்தலில் வெற்றிபெற்று மாநகர சபைக்கு தெரிவானார். அனால் அவரின் அரசியல் பிரவேசம், யாழ்பாணத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தின் தனது தேவை அற்றுப்போகும் எனக் கருதும் டக்ளஸ் தொடர்ச்சியாக நிசாந்தன் தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக்கு முறையிட்டு வருகின்றார்.

நிசாந்தன் தொடர்பாக டக்ளஸ் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக்கு செய்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில், கட்சி நிசாந்தனிடம் விளக்கம் கோரியுள்ளது.

இன்று கட்சியின் செயலாளர் சுசில் பிறேமஜெயந்த அவர்களைச் சந்திக்க நிசாந்தன் செல்கின்றார். அவர் டக்ளஸ் யாழ்பாணத்தில் நாடாத்தும் சுயலாப அரசில் தொடர்பாகவும் அவரின் செயற்பாடுகளால் எவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செல்வாக்கிழந்து வருகின்றது என்பது தொடர்பாகவும் விளக்கவுள்ளதாக நிசாந்தன் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com